- அனுபவங்கள்
இன்று ஒரு பொன்னான நாள்
நான் உடனே மேலே சென்று அவரை தரிசிக்க எண்ணி அங்கே சென்றேன். அவர் அமர்ந்திருந்தார். அவர் முன்னே சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்தேன்.
என்னையே உற்றுப் பார்த்த படி ஆசீர்வாதம் செய்து விட்டு என்ன கிருஷ்ணமாச்சாரி, “கிருஷ்ணதீர்த்தம்“ கதை எழுதி முதள் பரிசு பெற்ற கமலம்மாள் அவர்களின் புதல்வந்தானே என்றார்.
நானும் அவருடைய அருளை எண்ணி, "ஆமாம் ஸ்வாமி" என்றேன்.
"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.
நான் வாயைத்திறக்கும் முன்னரே ஸ்வாமிகளின் பக்கத்தில் இருந்த அவருடைய சிஷ்யர், நிறைய நடித்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.
நான் உடனே, "அது மட்டுமல்ல, உங்கள் ஆசியுடன் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றேன்.
"என்ன எழுதுகிறீர்கள்?" என்றார் ஸ்வாமி.
"ஆன்மீகம், மெய்ஞ்ஞானம்தான், விஞ்ஞானம் என்னும் அடிப்படையில் பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எல்லாம் எழுதுகிறேன்" என்றேன்.
மலர்ந்த முகத்துடன், "நிறைய எழுதுங்கள், நல்ல காரியம்" என்று ஆசீர்வதித்தார்.
என்னுடைய பேரன்கள் இருவரும் நமஸ்காரம் செய்தனர்.
இருவரையும் என்ன பெயர் என்று கேட்டு அவர்கள் இருவரும் ஹரிப்ரஸாத், ஹயக்ரீவன் என்று சொன்னவுடன் மகிழ்ந்து ஆசீர்வாதம் செய்தார்.
மிக்க மன நிறைவுடன் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து உடனே இந்தச் செய்தியை எழுதினேன்.
"என்ன தவம் செய்தனை?" என்னும் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
