Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



அன்பு நண்பர்களே,

உள்ளத்தில் நேர்மையும் உழைத்து வாழத் தெம்பும் இல்லாத சில முதுகெலும்பற்ற ஆண்கள் தங்களைக் காதலிக்கும் பெண் மற்றும் மணந்து கொள்ளும் மனைவி உட்படப் பெண்களை ஒரு கருவியாகக் கொண்டு பொருளும் சுகமும் தேடும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து வருகிறது. அத்தகைய ஆண்களின் உண்மை சொரூபம் வெளிப்படுகையில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஏற்படும் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் உருக்கமான பாடல்:

கேட்டு மகிழ: காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசீலா
இசை: ஏ.எம். ராஜா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை சேர்க்கவா
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?




Designed and maintained by AKR Consultants