- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
போன்ற பழமொழிகளைச் சொல்லி அதன் மூலம் நன்மையையே செய்யப் பணிக்கின்றனர் நம் முன்னோர்களும் ஆசிரியப் பெருமக்களும். ஆனால் உலகில் அனுதினமும் நல்ல மனம் கொண்டோர் வறுமையாலும், பலவித நோய்களாலும், இன்னும் இத்தகைய துன்பங்களை அனுபவித்து வாடுகையில், தினம் பொய்யைச் சொல்லித் தீமையையே எந்நாளும் செய்து வரும் பலருக்கு சுகபோக வாழ்வு அமைவது கண்டு சாமான்யர்கள் மனம் வாடுகையில் அவர்களுக்கு ஒரே ஆதரவு ஆண்டவனைத் தொழுவ்துவே ஆகும்.
நம் சக்திக்கு மீறித் துன்பம் நம்மைத் தாக்குகையில் அத்தகைய துன்பத்திலிருந்து காக்க இறையருள் தவிர வேறில்லை என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்தே. அவ்வாறு இறையருள் இருந்தும் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆகியோரின் உதவியை நாடுவதும் அவசியமாகும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
எனும் கருத்துக்கிணங்க ஒருவன் நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கையில் அவன் தானாக முன்வந்து பிறரது உதவியை நாணத்தினால் நாடாதிருப்பினும் அவனது நண்பர்கள் அவனது சார்பில் அத்தகைய உதவிகளைப் பெற்றுத் தந்து காத்தால் கண்கூடு.
இத்துடன் நமது நண்பர் ஒருவருக்கு நேர்ந்த துன்பத்தை நீக்க வேண்டி நாம் மனமுருகி இறையருளை வேண்டின் அத்தகைய பிரார்த்தனையின் சக்தி அளவிடற்கரியதாகும். இலக்கிய நயத்துடன் பலவிதமான அரிய படைப்புகளைத் தூய தமிழில் தரும் திறமையுடன் தத்துவ ஞானமும் ஒருங்கே நிரம்பப் பெற்று, இவை தவிர திரைப்படங்களுக்கேற்ற கதைகளை எழுதி, அத்திரைப்படங்களை இயக்கும் திறமையும் கொண்ட நமது இனிய நண்பர் தாயுமானவன் உயிரை வாட்டும் புற்று நோயின் கொடுமையிலிருந்து மீளப் போராடும் இத்தருணத்தில், அவர் நோயிலிருந்து பரிபூரண குணமடைந்து, அரிய பல திரைப்படங்களை உருவாக்கி, நிறையப் பொருள் ஈட்டி, தர்ம காரியங்கள் பலவும் உலக நன்மைக்காகச் செய்ய அருள்புரியுமாறு எல்லாம் வல்ல பராசக்தியை வேண்டுவதுடன் நண்பர்கள் தங்களாலியன்ற பொருளாதார உதவியையும் அவருக்குச் செய்யுமாறு வேண்டுகிறேன். அவரைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துத் தக்க பணிவிடைகள் செய்து வரும் அவரது மனைவி " திருமதி அன்பு" அவர்களிடம் தங்கள் உதவித் தொகையை சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறேன்.
பெயர்*: D.N. ANBU*
சேமிப்பு வங்கி கணக்கெண்*: S.B. A/C No. 439592816*
வங்கியின் பெயர்*: Indian Bank*
கிளை*: Adayar Branch*
விலாசம்*: 41/42, 1st Main Road, Gandhi Nagar, Adayar, Chennai – 20.*
அலைபேசி: 9840279035
இப்பாடலை அவருக்குக் காணிக்கையாக்குகிறேன்.
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/tc0006_annai...
பாடியவர்: பி. லீலா
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
திரைப்படம்: அன்னையின் ஆணை
நீயே கதி ஈஸ்வரி
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி
மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி
ஆவியே அமுதே ஆகமப் பொருளே
ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது தர்மம் தானோ? அம்பா
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

