Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



"கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே" என்று பாபனாசம் சிவம் அவர்கள் பாடியுள்ளார். அத்தகைய நாட்டியக் கலை பாரம்பரியமான பல வடிவங்களில் நமது பாரத தேசத்தில் பண்டைக்காலம் தொட்டே சிறந்து விளங்கி வருகின்றது. இவற்றுள் பரதநாட்டியம் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்து இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயின்று வருகின்றனர். மோகினியாட்டம், கதகளி ஆகிய நடனங்கள் கேரள மாநிலத்தின் சிறப்பம்சங்களாக விளங்குபவை. ஒடிசி நடனம் ஒரிஸ்ஸா மாநிலத்தின் பாரம்பரியமான கலையாகும். கதக் வட இந்தியாவில் தோன்றி வளர்ந்த நாட்டியக் கலை.

தமிழ்த் திரையுலகில் நாட்டியத்துக்காகப் புகழ் பெற்று விளங்கும் கலைஞர்களுள் நாட்டியப் பேரொளி பத்மினி, வைஜயந்திமாலா இருவரும் முறையே பரத நாட்டியம், கதக் ஆகிய நாட்டியங்களில் மேதைகளாக விளங்கினர். இவ்விருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு ஆடும் நடனம் அன்று முதல் இன்றுவரை தமிழ்த் திரைப்பட ரசிகர்களையும் நாட்டியம் பயிலும் பலரையும் வெகுவாகக் கவர்ந்து புகழ் பெற்றதாகும்.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே - Audio
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே - Video

படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சி. ராமச்சந்திரா
பாடியவர்: பி. லீலா, ஜிக்கி
ஆஅண்டு: 1958

ஏனோ இன்பமே புதுமையாய்க் காண்பதேன்
காதல் என்பது இது தானோ இது தானோ அறியேனே

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்
காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே

(சபாஷ் சரியான போட்டி)

ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்
ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்
ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட
ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்

ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே

சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி

ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
ஆணவத்தில் வந்தாயோடி?
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி

இன்னொருத்தி நிகராகுமோ? எனக்
கின்னொருத்தி நிகராகுமோ?
இடி இடித்தால் மழையாகுமோ? பேதைப்பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ?
மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
முன்னேவந்து நீ ஆடடி - இந்த
மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
முன்னேவந்து நீ ஆடடி

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants