Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



விலங்குகளிலே தந்திரம் மிகுந்தது குள்ளநரி. குள்ளநரியால் எந்த ஒரு விலங்கையும் தனியே வேட்டையாட இயலாது. எனவே பல குள்ளநரிகள் ஒன்றுசேர்ந்தே வேட்டையாடும். அத்துடன் இக்குள்ளநரி வேட்டையாடத் தக்க இரை இருக்கும் இடத்திலிருந்து ஊளையிடும். அந்த ஊளைச் சத்தத்தைக் கேட்டுப் புலி, சிங்கம் முதலான விலங்குகள் இரை இருக்கும் இடமறிந்து வேட்டையாடி இரையைத் தின்ற பின் மீதமிருக்கும் மாமிசத்தைக் குள்ளநரி உண்ணும்.

குள்ளநரியை விடவும் தந்திரமானவன் மனிதன் என்பதும் பிரசித்தம். மனிதன் சுயநலம் மிக்கவன். தான் மட்டும் பிழைத்தால் போதும் எனும் குறுகிய மனோபாவத்துடன் பெரும்பாலான மனிதர்கள் செயல்படுவதாலேயே அவர்கள் தம்மையறியாமல் ஒருவருக்கொருவர் பெருந்தீங்கிழைத்து வீணே வருந்தி மடிகின்றனர்.

கவிஞர்கள் பலர் குள்ளநரியுடன் மனிதனை ஒப்பிட்டு மனிதனால் விளையும் சமூக சீர்கேடுகளைப் பல பாடல்களின் வாயிலாக விளக்கி எழுதியுள்ள போதிலும் மனிதன் திருந்துவதாகக் காணோம். இதோ ஒரு கவிஞர் ஒரு நரிக்குறத்தி பாடுவதாக எழுதிய பாட்டில் குள்ளநரியை விட மனிதன் எவ்வாறு அதிகத் தீமை புரியும் குணமுள்ளவன் என விளக்குகிறார். பாடல் ஓர் இரவு படத்துக்காக எழுதப்பட்டது. இப்படத்தின் கதை வசனகர்த்தா பேரறிஞர் அண்ணா ஆவார். இப்பாடலை இயற்றிய கவிஞர் யாரென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன்.

ஐயா சாமி ஆவோஜி சாமி

திரைப் படம்: ஓர் இரவு
இயற்றியவர்:
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி

ஓ சாமி
ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
ஐயா சாமி ஓ ஐயா சாமி

கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி
பல்லிளித்துக் காட்டி பட்டம் பதவி தேடி
கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்

ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?

வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும்
பட்டினியைப் பாத்தும் புளி ஏப்பம் விடும்

ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
ஐயா சாமி ஒ ஐயா சாமி

காட்டிலுள்ள நரி ரொம்ப நல்லதுங்க - உங்க
நாட்டிலுள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க
குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
புள்ளை குட்டி யார்க்கும் நல்ல புத்தி வரும்

ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants