Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்வதால் வானமெங்கும் மேகமூட்டமாய் விளங்கினாலும் அவ்வப்போது வானில் சூழ்ந்த மேகங்கள் கலைகையில் நம் சிந்தை கவர்ந்த வெண்ணிலாவும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை. காதலர்கள் ஒருவரையொருவர் பிரிந்திருக்கும் காலத்தில் தங்கள் காதல் எண்ணங்களைத் தம் காதலர்க்குத் தெரிவிக்க வெண்ணிலவைத் தூதுவிடுதல் மரபு. அந்த வெண்ணிலா உண்மையிலேயே தூதுச் செய்தியை உரியவரிடத்தில் சேர்க்குமோ இல்லையோ, அதன் தண்ணொளி பிரிவுத்துயரைச் ச்ற்றே தணிக்க வல்லதாகையால் அதனிடம் தன் உள்ளத்திலுள்ள காதல் நினைவுகளை மனம் விட்டுச் சொல்கையில் காதல் கொண்டோரின் ஏக்கம் சற்றே தணியும் எனக் கொள்ளலாம்.

இதோ நம் நாயகனின் மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணின் நினைவால் அவன் தவிக்கையில் தன் உள்ளத்தின் தவிப்பை வெண்ணிலாவிடம் முறையிடுகின்றான், தன் உள்ளத்தைத் திருடிய கள்ளியிடமிருந்து அதனை மீட்டுத் தருமாறு.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants