Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி"

என்ற தமிழர்களின் தொன்மையைக் குறித்து எழுதப்பட்ட வரிகளின் பொருள் பற்றிய சர்ச்சைகள் நிறைய எழுந்துள்ளன. கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தமிழன் தோன்றினான் எனில் அவன் காற்றாக இருந்தானா? என ஒரு அன்பர் கேள்வி எழுப்புகிறார். மற்றொரு நண்பர் "கல்" என்பதைக் கல்வி எனவும் மண் எனபதற்கு பதில் "மன்" என மன்னரைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொண்டு, கல்வி பயிலும் வழக்கமும், மன்னராட்சியும் ஏற்படுவதற்கு முன்னதாகவே தோன்றிய குடி என்கிறார். வேறொரு அன்பர், கல் என்பதைக் கற்காலம் எனவும் மண் என்பதை, எனது உனது என மண்ணை மனிதன் சொந்தம் கொண்டாடி எல்லைகளைப் பிரித்த காலத்தையும் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும் தமிழன் உலக மக்கள் அனைவரிலும் மிகவும் தொன்மையானவன் என்னும் கருத்துக்கு மாற்றுக் கருத்தை யாரும் வெளியிடவில்லை. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழனின் தொன்மைக்கும் மேன்மைக்கும் சான்றாக விளங்குகிறது.

தமிழர்கள் பண்டைக்காலம் தொட்டு இன்றளவும் ஒருவரோடொருவர் நட்புறவுடன் பழகுவதையே பெரிதும் விரும்பி, அதற்கேற்றவாறு தமது தேவைகளைத் தியாகம் செய்து வாழும் பண்பாளர்களாகவே உள்ளனர் என்பது கண்கூடு. தமிழ் நாட்டைப் பல கூறுகளாகப் பிரித்து மன்னர்கள் ஆண்ட பொழுதும், ஒருங்கிணைந்த தமிழ்நாட்டை இன்று அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியில் ஆளும் பொழுதும் தமிழ்நாடு பெரும்பாலும் அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வருகின்றது. அந்த அமைதி அவ்வப்பொழுது குலைந்து அல்லல்கள் ஏற்படுவதற்கு அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் பெரும்பலும் ஆட்சியாளர்களே காரணமாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்குத் தமது ஆட்சித் திறனே காரணம் என்று யாரேனும் அரசியல்வாதி கூறுவாரெனில் அவர் கூறுவது பொய் என்பது திண்ணம்.

தமிழனின் உன்னத குணத்தை விரிவாக எடுத்துரைக்கும் நாமக்கல் கவிஞரின் பாடலை ஏற்கெனவே பிறிதொரு பாடலுடன் பதிவு செய்துள்ளேன். அப்பாடலில் இருந்து திரைப்படத்தில் பாடலாக அமைக்கவென்று மிகவும் பொருத்தமாக இருக்கும் வரிகளைத் தேர்வு செய்து இன்னிசையுடன் தந்துள்ளனர்.

தமிழன் என்றொரு இனம் உண்டு

திரைப்படம்: மலைக்கள்ளன்
இயற்றியவர்: நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை (நாமக்கல் கவிஞர்)
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

தமிழன் என்றொரு இனம் உண்டு தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழதம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்
அன்பே அவனது வழியாகும்

கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்

தமிழன் என்றொரு இனம் உண்டு

மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்
மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேலெனப் பேசிடுவான் தருவது மேலெனப் பேசிடுவான்

தமிழன் என்றொரு இனம் உண்டு

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் நிறை குறையாமல் பண்ணினவன்

தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு
குணம் உண்டு

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants