Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டிங்கு
ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

எனும் ஔவையின் அருள்வாக்கை மதியாது காசாசை மிகுதியால் காவியுடை தரித்துக் கள்ள மனத்துடன் பொய்யான வேடமிட்டுப் பொருள் பெற்று மருள் வாக்கை அருள் வாக்கெனக் கூறி ஏதேதோ பிதற்றும் போலிச் சாமியார்களை நம்பி ஏமாந்து போகாதே மானுடா.

இவ்வுலகில் என்றும் நிலையான செல்வம் அன்பொன்றேயாகும். உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் நீ அன்பு செலுத்துவாயாகில் அவையனைத்தும் உன் மேல் பன் மடங்கு அன்பு செலுத்துதலால் நீ என்றும் அழியாத அமரத்துவம் பெறுவாய். உன் பூத உடல் மறைந்தாலும் உன் பெயர் நிலைத்து நிற்கும். நீ உலகிற்கு வழங்கிச் சென்ற அன்பு என்றும் நிலைத்து உலகைக் காத்துநிற்க, கடவுள் நிலையை நீ அடைவாய்.

அல்லாமல் அழியும் பொருளான செல்வத்தையே தேடி உன் வாழ்நாளில் அன்பு செலுத்தத் தவறி வீணே மடிவாயெனில் உன்னை நினைப்பவர் யாருமின்றி நரகக் குழியில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அல்லலுறுவாய்.

அமரத்துவமா, அடுத்தடுத்த பிறவியா? எது வேண்டும் உனக்கென நீயே முடிவெடு.

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு

திரைப்படம்; பட்டிணத்தார்
இயற்றியவர்: பட்டிணத்தார்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு

பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு ஆ....
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே

நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை ஆ...
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants