Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



மஹாகவியின் "கண்ணன் என் தோழன்" பாடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து அதனைக் காதல் காட்சிக்கு ஏற்றவாறு பெண் குரலில் பதிவுசெய்து "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய விருந்தாக அமைத்த நம் திரையுலக மேதைகள் அவரது "கண்ணம்மா என் காதலி" எனும் பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் பொருளும் நயமும் கெடாதவாறு அதில் சில வார்த்தைகளை மாற்றியமைத்து, அழகிய இனிமையான இசையமைத்து விருந்தாகப் படைத்துள்ளனர் பழம்பெரும் பாடகர் டி.ஆர். மஹாலிங்கம் குரலில்.

'என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே" என்று முந்தைய பாடலில் பாரதியார் குறிப்பிட்டிருப்பதாலோ என்னவோ இப்பாடலில் கண்ணம்மா என்ற பெயரை ஆங்கங்கே சேர்த்து மெருகேற்றியுள்ளனர்.

தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே

திரைப்படம்: விளையாட்டு பொம்மை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
ஆண்டு: 1954

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் நிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள்
பார்த்திருந்தால் வருவேன் நிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள் - கண்ணம்மா
வார்த்தை ததவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி கண்ணம்மா

தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே

மேனி கொதிக்குதடி கண்ணம்மா மேனி கொதிக்குதடி - தலை
வேதனை செய்குதடி கண்ணம்மா மேனி கொதிக்குதடி
வானினிடத்தையெல்லாம் ஆ ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ
வானினிடத்தையெல்லாம் வெண்ணிலா வந்து தழுவுது பார் - கண்ணம்மா
மோனத்திருக்குதடி
மோனத்திருக்குதடி வவையகம் முழ்கித் துயிலினிலே - கண்ணம்மா
மோனத்திருக்குதடி
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ? - கண்ணம்மா
தீர்த்தக் கரையினிலே

கூடிப் பிரியாமலே ராவெல்லாம் கொஞ்சிக் குலாவியங்கே
ஆடி விளையாடியே உன் மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடி
தவம் பண்ணியதில்லையடி கண்ணம்மா தீர்ததக் கரையினிலே

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants