Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண் ஆயினார்.

- நீதி நெறி விளக்கம்:52 (17-ம் நூற்றாண்டு)
—- குமரகுருபர சுவாமிகள்

இக்கவிதையில் குறிப்பிட்டுள்ள கருத்து பாரத நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்துவதாகும். ஏனெனில் நமது நாட்டின் குடும்ப, சமுதாய அமைப்பில் பெண்ணுக்குப் பொறுப்புகள் மிகவும் அதிகம். குழந்தைப் பருவம் முதுமை வரை அவள் தன் குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவர் மீதும் மிகுந்த அக்கரை கொண்டு அவர்களது நலம் பேணுவதை மிகவும் இன்றியமையாத கடமையாகக் கொண்டு செயல்படுகிறாள். பெண்களின் இத்தகைய பொறுப்பும் அக்கரையும் மிக்க வாழ்க்கை நெறிமுறையினாலேயே நமது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருந்த போதிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாடம் அடுப்பு எரிகிறது. அனைவருக்கும் பசிக்கு உணவு கிடைக்கிறது.

இல்லறத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும் தியாகம் செய்கிறாள். குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும் உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே தான் உணவருந்துகிறாள். அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும் இழக்கிறாள்.

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

திரைப்படம்: சித்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants