- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”
- திருமங்கையாழ்வார்
தாயைப்போல் அன்பு செலுத்த வேறு ஒருவர் உலகில் இல்லை. அதனாலேயே இறைவனை அடியார்கள் தாயினை விடவும் அன்பு செய்பவர் என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய மேன்மை கொண்ட தாயின் அருமை இளவயதில் எல்லோருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாகவே தம் சுகம் ஒன்றையே பெரிதாக எண்ணி, தாய் தந்தையரைத் தவிக்க விடுவோரும் இவ்வுலகில் உளர். அவ்வாறு இளமை வேகத்தில் பெற்றோரை அலட்சியம் செய்து, கட்டிய மனைவிக்கும் துரோகம் செய்து தன் பொருளையெல்லாம் விலைமாது ஒருத்தியின் மோக வலையில் விழுந்து சிற்றின்பத்தி்ற்கெனவே செலவிட்டு வீணாகப் போன ஒருவன் தன் துன்பத்துக்கான காரணங்களை எண்ணிப்பார்த்து வருந்துகிறான். தன் உதாசீனத்தால் தன்னை வி்ட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரைத் தேடியலைகிறான்.
அவன் தன் தாய் தந்தையரைக் கண்டானா? தான் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தானா?
இக்கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு விடையும் தரும் கதையே ஹரிதாஸ் கதை.
என்னுடல் தனிலொரு ஈ மொய்த்த போது
திரைப் படம்: ஹரிதாஸ்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944
என்னுடல் தனிலொரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற் போல் இடிந்தும்
என்னுடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண்ணுறங்காது உடல் இளைத்தும்
இன்னமுதூட்டி இன்பத் தாலாட்டி
என்னை ஆளாக்கிய பெருமைக்கு
என்னிடம் இயற்கையில் - உங்கள்
உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைம்மாறேது?
என்னுயர் தவப் பயன் அம்மையே அப்பா!
இம்மையில் எனது கண்கண்ட என் அருட்கடவுள்
அம்மையே அப்பா! எனக்கொரு நற்கதியுண்டோ?
என்னரு நிதியாம் அம்மையே அப்பா
என் பிழை பொருத்தருள்வீரோ?
என்னுயிர்த் துணையாம் அம்மையே அப்பா!
எங்கு சென்றுங்களைக் காண்பேன்?
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவிலாமலே நான் அறிவிலாமாலே நன்றி மறந்தேன்
அறிவிலாமாலே நன்றி மறந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே!
அருமைத் தாயே தந்தையே என்னருமைத் தாயே தந்தையே!
ஆகிரா

