Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



பரத்வாஜர், ரைப்யர் என்ற இரு நெருங்கிய சினேகிதர்களான அந்தணர்கள் வனத்தில் ஆசிரமங்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். ரைப்யரும் அவரது புதல்வர்களான பராவசு, அர்வாவசு எனபவர்களும் நன்றாக வேதம் ஓதி வித்வான்களாகப் புகழ் பெற்றார்கள். பரத்வாஜர் பெரும்பாலும் தவத்திலேயே தன் நேரத்தையெல்லாம் கழித்துவந்தார். அவரது மகனான யவக்ரீதன், ரைப்யரும் அவரது இரு மகன்களும் அவர்களது கல்வித்திறமையால் தன் பிதாவையும் தன்னையும் விட அதிக மதிப்பைப் பெற்றிருந்தது கண்டு பொறாமையுற்றான். அவர்களை விடவும் மேலான நிலையடைய வேண்டி தேவேந்திரனைக் குறித்துக் கடும் தவம் செய்தான்.

தன் தவத்துக்கிறங்கி வந்து காட்சி கொடுத்த இந்திரனிடம், "பிராம்மணர்கள் இதுவரை ஓதியிராத வேதங்கள் யாவும் எனக்கு வர வேண்டும், நான் பெரிய வித்துவானாக வேண்டும். இதற்கு எனக்கு நீங்கள் வரம் தர வேண்டும்" எனவே, இந்திரன், "பிராம்மணனே, படிப்புக்கு வழி படிப்பேயாகும், தவமல்லல, தகுந்த குருவை நாடிக் கற்றுக்கொள்" என்று சொ்ல்லிவிட்டு மறைந்தான். யவக்ரீதன் இந்திரன் அறிவுரையை செவிமடுக்காது மீண்டும் முன்னிலும் மிகுந்த கடுமையான தவத்தை மேற்கொண்டான். தவத்தின் இடையே கங்கையில் நீராடச் செல்கையில் கங்கையின் கரையில் ஒரு வயோதிக பிராம்மணன் அமர்ந்து கொண்டு கையால் மணலைப் பிடிப்பிடியாக அள்ளித் தண்ணீரில் போட்டுக் கொண்டருக்கக் கண்டு, "என்ன செய்கிறாய் கிழவா?" என்று கேட்டான்.

அக்கிழவன், "கங்கையாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுகிறேன்" என்றான். யவக்ரீதன் அவனைப் பார்த்து நகைத்து, "ஓடும் ஆற்றை இம்மாதிரி தடுத்துச் சேது கடட முடியாது, வேறு காரியத்தைப் பார்" என்றான்.

"நீ படிக்காமலேயே பண்டிதனாக முயல்கையில் நான் இவ்வாறு சேது கட்ட முயலக் கூடாதா?" என்று பதிலுக்கு அக்கிழவன் கேட்கவே, அக்கிழவன் இந்திரன் என்று அறிந்து, "நான் எவ்வாறு ஒரு வித்துவானாக முடியுமோ அவ்வாறே எனக்கு வரம் தருவீர்" என்று கேட்டு இந்திரனின் ஆசிகளைப் பெற்றுச் சென்று, கல்வி கற்றுப் பெரிய பண்டிதனானான்.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, காளிதாசனும் காளமேகமும் காளியின் அருளால் கல்வியை முறையாகப் பயிலாமலேயே பெரும் கவிஞர்களானார்களென்று நமக்கெல்லாம் காதில் பூ சுற்றும் கதைகளும் உண்டு. எவ்வாறாயினும் காளிதாசனும் காளமேகமும் பெரும் புலவர்கள் என்பதில் ஐயமில்லை.

யார் தருவார் இந்த அரியாசனம்?

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants